ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின்(chandrababunaidu) மகன் நர லோகேஷுக்கு போலீஸ் சம்மன் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷுக்கு முன்ஜாமின் மனுவை ஆந்திர உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்த நிலையில் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
உள்வட்டச்சாலை முறைகேடு தொடர்பான வழக்கில் நர லோகேஷுக்கு ஆந்திர சிஐடி போலீஸ் நேரில் சம்மன் அளித்தது.நோட்டீஸை பெற்றுக்கொண்ட நர லோகேஷ் அக்.4-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்குதேசம் கட்சி எம்.பி.யான ஜெயதேவ் கல்லாவுக்கும் ஆந்திர சிஐடி போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.