‘ப்ளூ ஸ்டார் (Blue star) திரைப்படம்’ இன்று வெளியாவதையொட்டி நடிகர் சாந்தனு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த்திரை உலகில் ஆர்.ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார், முடக்கறுத்தான், தூக்குதுரை ஆகிய 4 திரைப்படங்கள் இன்று ஒரே நாளில் வெளியாகின.
அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் ப்ளூ ஸ்டார். அறிமுக இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கிய இந்த திரைப்படத்தை, லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இதில் கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
https://x.com/ITamilTVNews/status/1750385175975141876?s=20
ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பில் இருந்த இப்படத்தின் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது.
படத்தை பார்த்தவர்கள் எக்ஸ் தளத்தில் தங்களுடைய விமர்சனங்களை கூறியுள்ளனர். அதன்படி, இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவிற்கு பூர்த்தி செய்தது என்று பார்க்கலாம்.
இதையும் படிங்க : Movie release: ஒரே நாளில் 4 படங்கள் ரிலீஸ் – உங்கள் சாய்ஸ்?
இந்த நிலையில் ‘ப்ளூ ஸ்டார் திரைப்படம்’ (Blue star) இன்று வெளியாவதையொட்டி நடிகர் சாந்தனு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “சக்கரக்கட்டி முதல் ‘ப்ளூ ஸ்டார்’ வரையிலான இந்த பயணம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்தது. வாழ்க்கை முழுவதும் நினைத்து பார்க்க கூடிய நல்ல நினைவுகளை கொடுத்தது.
இதையும் படிங்க : journalist மீது கொலை வெறித் தாக்குதல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
உங்க வீட்டு பசங்க ஜெயிக்குற படம் தான் ‘ப்ளூ ஸ்டார்’. திரையரங்குக்கு சென்று திரைப்படத்தை பாருங்கள். நிச்சயம் இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். ஜெயிக்கிறோம்.” என்று சாந்தனு நெகிழ்வுடன் பதிவிட்டுள்ளார்.
அதே போல் சித்த மருத்துவர் கே.வீரபாபு, எழுதி, இயக்கி, தயாரித்து, பின்னணி இசை கோர்த்து, நடித்துள்ள படம் ‘முடக்கறுத்தான்’.
இந்தப்படம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் குற்றத்தைக் கருவாக வைத்து தயாராகியுள்ளது.
இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகி பாபு, இனியா, ராஜேந்திரன், பாலா சரவணன் என பலர் நடித்திருக்கும் திரைப்படம் தூக்குதுரை. நகைச்சுவை மற்றும் திகில் படமான இப்படம் உருவாக்கி உள்ளது.