இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பும் மையங்களில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாக்கி உள்ளது.
இலங்கையில் சமீக காலமாக சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களில் விலை கடுமையாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளதோடு கடும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் நெடு நேரமாக காத்த்திருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கையில் டொலர்களின் வீழ்ச்சி காரணமாக எரிபொருளை ஏற்றி வந்த கப்பல்கள் நாட்டை வந்தடைவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெட்ரோல் விலை 200 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யபடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் கடுமையாக பாதிக்கபடுகின்றனர்.
கொழும்பு யாழ்ப்பாணம் முல்லைத்தீவு உள்ளிட்ட பல இடங்களில் வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்பும் மையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ரெயில் போக்குவரத்து சேவைக்கான எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டால் பயணிகள் ரெயில் சேவைகள் குறைக்கப்படும் என்றும் அடுத்த 5 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும் ரெயில் சேவைகளின் செயலாளர் தெரிவித்துள்ளார்.