கள்ளக்குறிச்சி அருகே விஷச் சாராயம் குடித்து இதுவரை வரை 50க்கும் மேற்பட்டோர் பலியாகி ( G.V. Prakash sad for kallakurichi issue ) உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம் என நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் கள்ளச் சாராயம் அருந்திய 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் .
Also Read : தூத்துக்குடியில் கொடியவகை போதைப் பொருள் பறிமுதல் – டிடிவி தினகரன் கண்டனம்..!!
தமிழகத்தையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தும் வரும் நிலையில் தற்போது நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது . கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது , இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு (G.V. Prakash sad for kallakurichi issue ) கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை என ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.