கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் நடிகை அமலா பால் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். ஆனால் அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் சென்றடையவில்லை .
இதனை தொடர்ந்து மைனா படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென இடத்தை பிடித்து கொண்டார் .தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இந்த நிலையில் , தலைவா திரைப்படத்தில் நடித்த போது ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.
விவாகரத்து பின்னர் நடிகை அமலா பால், சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய , ஆடை என்கிற திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.
அதன் பின்னர் கோலிவுட்டில் அவருக்கு பெரியளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழிகளில் கவனம் செலுத்த தொடங்கினார் அமலா பால்.
இந்த நிலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் கோவாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜகத் தேசாய் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கேரள மாநிலம் கொச்சியில் மிகவும் எளிமையாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணம் முடிந்த அடுத்த மாதமே தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அமலா பால் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார் .
இதனை தொடர்ந்து நிறைமாத கர்பிணியாக இருக்கும் அமலாபால் கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் நடிகை அமலா பால் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெண்களின் மகப்பேறு காலத்தை மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், கேரள மாநிலம் கொச்சியில் தனியார் மருத்துவமனை சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை அமலா பால் கலந்துகொண்டார்.105 கர்ப்பிணிப் பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.அதில் நடிகை அமலாபால் Ramp Walk செய்து அசத்தினார்.