பால கணபதி
(பிரதம திதி)
பாலகணபதியை பிரதம திதியில் வணங்கினால் கஷ்டங்கள் நீங்கும். சீதள நோய் குணமாகும்.
தருண கணபதி
(துவிதியை திதி)
தருண கணபதியை துவிதியை திதியில் வணங் கினால் வலிப்பு நோய் நீங்கும். செய்கிற காரியங் களுக்கு வழித்து ணையாக அருள் புரிவார்.
பக்த கணபதி
(திருதியை திதி)
பக்த கணபதியை திருதி யை திதியில் வணங்கி னால், ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு சென்று வசிப்பவர்களுக்கு நன்மை ஏற்படும்.
வீர கணபதி
(சதுர்த்தி திதி)
வீர கணபதியை சதுர்த்தி திதியில் வணங்கினால் மாத விடாய் கோளாறுகள் நீங்கும். வரன் அமையும்.
சக்தி கணபதி
(பஞ்சமி திதி)
சக்தி கணபதி யை பஞ்சமி திதியில் வணங்கி, அன்ன தானம் வழங்கிட வாகன விபத்துக்களில் இருந்து நம்மை காப் பாற்றுவார்.
த்விஜ கணபதி
(சஷ்டி திதி)
த்விஜ கணபதியை சஷ்டி திதியில் வணங் கினால் தொழில் மேம் படும். பல ஜென்ம பாவங்கள் நீங்கும்.
சித்தி கணபதி
(சப்தமி திதி)
சித்தி கணபதியை சப்தமி திதியில் வணங்கி னால், இரும்பு தொழில் செய்பவர்களுக்கு நன்மை ஏற்படும்.
உச்சிஷ்ட கணபதி
(அஷ்டமி திதி)
உச்சிஷ்ட கணபதியை அஷ்டமி திதியில் வணங்கினால் கல்வித் துறையினருக்கும், கோயி லில் வேலை செய்பவர்க ளுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.
விக்ன கணபதி
(நவமி திதி)
விக்ன கணபதியை நவமி திதியில் அபி ஷேக, ஆராதனை செய்தால், பொன் வியா பாரி, வட்டி கடை நடத்துபவர்களுக்கு தொழில் மேன்மை அடையும்.
ஷூப்ர கணபதி
(தசமி திதி)
ஷூப்ர கணபதியை, தசமி திதியில் வணங்கினால் சினிமா, கம்ப்யூட்டர், கட்டடத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நன்மை அளிக்கும்.
ஹேரம்ப கணபதி
(ஏகாதசி திதி)
ஹேரம்ப கணபதியை ஏகாதசி திதியில் வணங்கினால் விவசா யம், காவல்துறை, விஞ்ஞானம், பொறியியல், வரி துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு சகல நன்மை கிடைக்கும்.
லட்சுமி கணபதி
(துவாதசி திதி)
லட்சுமி கணபதியாக காட்சியளிப்பவரை துவாதசி திதியில் பொங்கல் வைத்து வணங்கினால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
மஹா கணபதி
(த்ரயோதசி திதி)
மஹா கணபதியை பிரதமை திதி யில் வணங்கினால் உருக்கு ஆலை, எழுத்து – பத்திரிகைதுறை, விமா னம், சுங்கத்துறையின ருக்கு நன்மை ஏற்படும்.
விஜய கணபதி
(சதுர்த்தி திதி)
விஜய கணபதியை சதுர்த்தி திதியில் வணங்கினால் நீதிமன்றங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு நன்மை கிடைக் கும். நீண்டகால வழக்குகள் தீர்வாகும்.
நிருத்த கணபதி
(அமாவாசை அல்லது பவுர்ணமி திதி)
நிருத்த கணபதியை அமாவாசை/பவுர்ணமி தினத் தன்று வணங்கினால், பிதுர்கள், தேவதைகளின் ஆசீர்வாதமும் கிடைக்கும். குடும்ப சண்டைகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.
ஸ்ரீ விநாயகர் பெருமைகள்:-
வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் பெரியோர்கள். நமது வாழ்வு மட்டுமல்ல; நம் சந்ததியினரின் வாழ்க்கைச் செழிக்கவும் பிள்ளையார் வழிபாடு அருள் செய்யும்.
குறிப்பாக ஆவணி மாதம், அஸ்த நட்சத்திரமும் சுக்லபட்ச சதுர்த்தியும் கூடிய விநாயகர் சதுர்த்தி திருநாளில் அவரை வழிபடுவதால் விசேஷமான பலன்கள் கைகூடும்.
உன்னதமான அந்தத் திருநாளில் உள்ளன்போடு கணபதியை வழிபட ஏதுவாக, அவரது மகிமைகளை – பிள்ளையாரின் பெருமைகளை அறிந்து மகிழ்வோமா?
தத்துவப் பொருளே!
முக்காலத்துக்கும் வழிகாட்டுபவர் பிள்ளையார், தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாத தெய்வம், கணங்களுகெல்லாம் அதிபதி, நாம் செய்யும் நற்காரியங்கள் அனைத்துக்கும் அவரே ஆதாரம். அவரை வழிபடுவதால் சுகம், ஞானம், ஆனந்தம் என அனைத்தும் வாய்க்கும்.
விநாயகரின் திருவடிகள் இரண்டும் ஞானம், கிரியை எனும் சக்திகளை உணர்த்துபவை. சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றையும் முக்கண்களாகப் பெற்றவர். துதிக்கை – படைத்தல், மோதகம் ஏந்திய திருக்கரம் – காத்தல், அங்குச கரம் – அழித்தல், பாசம் உள்ள கை – மறைத்தல், தந்தம் உள்ள கை அருளல்… இப்படி, அவரது ஐந்து கரங்களும் ஐந்தொழில்களைக் குறிப்பது மட்டுமின்றி, ஐங்கரங்களும் ‘சிவாய நம’ என ஐந்தெழுத்து மந்திரத்தை உணர்த்தும் என்றும் சொல்வார்கள்.
எல்லா உலகங்களையும், உயிர்களையும் தன்னுள் அடக்கி, பாதுகாத்து அருள்வதை அவரது பேழை வயிறு உணர்த்துகிறது.
ஆக, தத்துவப்பொருளாகி உத்தம பலன்களை நமக்கருளும் நாயகனாய் திகழ்கிறார் வித்தகக் கணபதி!
விநாயகர் சதுர்த்தி விரத மகிமை
‘சமஷ்டிப் பிரணவம்’, ‘வ்யஷ்டிப் பிரணவம்’ ஆகிய இரண்டு பிரணவ மந்திரங்களின் ஸ்வரூபமாகக் காட்சி தருபவர் விநாயகர் என்கின்றன ஞான நூல்கள்.
இவரை விநாயகர் சதுர்த்தி நாளில் மோதகம், அப்பம், அவல், பொரி கடலை, தேங்காய்ப் புட்டு, பொங்கல், எள்ளுருண்டை, தேன், சர்க்கரை, தினை மாவு, பால், மா, வாழை, கரும்பு, நாவற்பழம், விளாம்பழம், இளநீர் படைத்து வழிபடுவதால்… வீட்டில் செல்வம் பெருகும், அறிவு பிரகாசிக்கும், குடும்ப ஒற்றுமை உண்டாகும், பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்றெல்லாம் அறிவுறுத்துகின்றன புராணங்கள்.
அந்தத் திருநாளுக்கு அப்படியென்ன மகிமை? முழுமுதற் தெய்வமாம் பிள்ளையார் அவதரித்த திருநாள் அது.
ஒருமுறை, ஈசனும் அம்பாளும் திருக்கயிலாயத்தில் இருக்கும் சித்திர மண்டபத்துக்கு எழுந்தருளினார்கள். அங்கேயுள்ள மந்திர மூலங்களின் மீது தங்களின் திருப்பார்வையை செலுத்தினார்கள். அப்போது ஓர் ஒளி வட்டமும் அதிலிருந்து தண்டமும் தோன்றின; தண்டம் ஒலியாக தழைத்தது. இந்த ஒளி – ஒலி இரண்டிலும் இருந்து உதித்த திருவடிவே, வரத கணபதி.
ஒளி வட்டம் – பிந்து; தண்டம் (ஒலி) – நாதம். பிந்து மற்றும் நாதத்தில் இருந்து அகர, உகர, மகரம் பிறக்கும். இந்த மூன்றும் சேர்ந்து ‘ஓம்’ என்று ஒலிக்கும். ஆக, ‘ஓம்’காரம் எனும் பிரணவத்தின் உருவமே பிள்ளையார்.
அவரை, அவர் அவதரித்த திருநாளில் வழிபட, அனைத்து கடவுளரையும் வழிபட்ட பலன் கிடைக்கும். (பிள்ளையார் அவதாரம் குறித்து வேறு சில திருக்கதைகளும் சொல்லப்படுவது உண்டு).
விநாயகர் சதுர்த்தியில் வழிபடுவது எப்படி?
மகள் பார்வதிக்கு இமவான் விவரித்ததாக, விநாயக சதுர்த்தி விரத வழிபாடு குறித்து விளக்குகின்றன புராணங்கள். இந்த நாளில், அதிகாலையில் நீராடி, நித்ய கர்மங்களை நிறைவேற்ற வேண்டும்.
பிறகு பூஜை நடைபெறும் இடத்தைச் சுத்தப்படுத்தி, மாக்கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். மண்ணால் பிள்ளையார் விக்கிரகம் செய்து வைத்து வழிபடுவது விசேஷம்! அழகான குடை அமைத்து, அதன்கீழ் விநாயகரை அமர்த்தி, அறுகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்தி, சந்தன-குங்குமத் திலகமிட்டு அலங்கரிக்கலாம். நைவேத்தியமாக மோதகம், அப்பம், அவல், பொரி கடலை, தேங்காய்ப்புட்டு, பொங்கல், எள்ளுருண்டை, தேன், சர்க்கரை, தினை மாவு, பால், மா, வாழை, கரும்பு, நாவற்பழம், விளாம்பழம், இளநீர் ஆகியவற்றை தாம்பூலத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
பின்னர்…
வக்ர துண்ட மஹாகாய
சூர்ய கோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவ
சர்வ கார்யேஷ சர்வதா…
– போன்ற விநாயகர் ஸ்லோகங்கள், துதிப்பாடல்களைப் பாடி, தூப – தீப உபசாரங்கள் செய்து வழிபட வேண்டும். வழிபாடு முடிந்தபின் குறிப்பிட்டதொரு நன்னாளில், விநாயகர் விக்கிரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலையில் சேர்க்கலாம்.
நமது செயல்பாடுகள் சிறக்க வேண்டும் எனில் மனது செம்மையாக இருத்தல் அவசியம். மனதுக்குக் காரகன் சந்திரன். விநாயக சதுர்த்தியன்று ஆனைமுகனை வழிபடுவதால் அவரருளோடு, சந்திரனின் அனுக்கிரகமும் வாய்க்குமாம். அதன் பலனாக நம் மனம் சிறக்கும்; செயல்கள் வெற்றி பெறும். மேலும் கேது, சனி ஆகிய கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும் நீங்கும் என்பார்கள்.
விநாயகர் சதுர்த்தி மட்டுமின்றி, பிள்ளையாருக்கு உகந்த வேறு சில விரதங்களும் உண்டு.
அவை:- பிள்ளையார் நோன்பு, ஸித்தி விநாயக விரதம், செவ்வாய்க்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம், சங்கடஹர சதுர்த்தி.
மேலும் செவ்வாய்க் கிழமையுடன் சேர்ந்து வரும் சதுர்த்தி மிகவும் நற்பலன் தரும்.
இதைப் படித்ததும் விரத தினங்களில்தான் விநாயகரை வழிபட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. பிள்ளையாரின் மகிமையை எடுத்துரைக்கும் நோக்கில், மேற்சொன்ன விரத நாள்கள் விசேஷமாகச் சொல்லப்பட்டாலும், ஆனைமுகனை அனுதினமும் வழிபட்டு அருள்பெறலாம்.
தொட்டதெல்லாம் துலங்கும்!
விநாயகரை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், பிரதிஷ்டை செய்யலாம். எளிதில் கிடைக்கும், எங்கும் கிடைக்கும் அறுகம்புல்லினால் 108 முறை அவரின் திருநாமத்தைச் சொல்லியும், விநாயகர் அகவல் முதலான துதிப்பாடல்களைப் படித்தும் அவரை வழிபடுவதால், நமக்குத் தேவையான நல்ல கல்வி, பட்ட மேற்படிப்பு, நிலையான வேலை என்று அனைத்தையும் தந்தருள்கிறார்…
ஸ்ரீ விநாயகர் பெருமான் திருவடி போற்றி போற்றி!