விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் ‘அப்படிப்போடு’ பாடலுக்கு சல்மான் கான் ஸ்டைலில் டான்ஸ் ஆடிய காவலர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் செப்.10ஆம் தேதி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.அந்த வகையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத் விநாயகர் கோவிலில் 40 அடி உயரமும் 50 டன் எடையும் கொண்ட பிரம்மாண்ட விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. நாட்டின் மிக உயரமான விநாயகர் சிலையாக இது கருதப்படுகிறது.

மேலும் இந்த சிறப்பு அம்சம் என்வென்றால் பன்னிரு தெய்வங்களின் திருமுகங்களும், ஆயுதங்களைத் தாங்கிய 24 கைகளும் ஏழு குதிரைகள் கொண்ட தேரும் இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 150 கலைஞர்களின் உழைப்பில், ரூ. 1 கோடி செலவில் நான்கு மாதங்களில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
https://x.com/rkntwia/status/1707313000489836681?s=20
அதன்படி இந்த ஆண்டும் 40 அடி உயரத்தில் எழுப்பப்பட்ட விநாயகர் சிலை, வழிபாட்டுக்குப் பின் ஹுசைன் சாகர் ஏரியில் கரைக்க எடுத்து செல்லபட்டது.விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் சினிமா பாடல் ஒளிக்கப்பட்டது .
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டிருந்த காவலர் ஒருவர் விஜயின் ‘அப்படிப்போடு’ பாடலுக்கு சல்மான் கான் ஸ்டைலில் டான்ஸ் ஆடியயுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.