விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 2 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவதாக தஞ்சை சரக டிஐஜி கயல்விழிக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏ.டி.எஸ்.பி ஜெயசந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டது.
அப்போது, சரக்கு லாரி ஒன்றும், 3 காரும் வருவதையும் அறிந்து அதனை சோதனையிட்டனர். இதில் இருந்த பண்டல் பண்டலாக கஞ்சா இருப்பதை அறிந்த போலீஸ், 2 கோடி ரூபாய் மதிப்புடைய கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், வாகனங்களில் இருந்த, ஆந்திரா மற்றும் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 14 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.