1999 ஊழல் 2004 ஊழல் மீது அவர் இவ்வளவு ஆர்வம் காட்டும் போது, அண்ணாமலை ஏன் ஆருத்ரா தங்க மோசடி மற்றும் பிற மோசடிகளில் ஆர்வம் காட்டவில்லை? என காயத்ரி ரகுராம் (gayathri raghuram) கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக பைல்ஸ் என்ற தலைப்பில் ஏற்கனவே திமுக தலைவர்கள், அமைச்சர்கள் சொத்துப்பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது “DMK FILES 2” என்ற இரண்டாவது சொத்து தொடர்பான ஆவணங்களை ஆளுநர் ஆர்.என்.ரவியின் சந்திப்புக்கு பிறகு, தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த நிலையில் அண்ணாமலையின் “DMK FILES 2” தொடர்பான ஆவணங்கள் குறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார். அதில்
பினாமி மோசடி பணம், கருப்பு பணம் என்ன பயன்? புகார்களின் பயன் என்ன? ஈடி ரெய்டுகள், வருமான வரி ரெய்டுகள் மட்டுமே நடக்கும். அவர்கள் எந்த தகவலையும் வெளியிடுவதில்லை. ஆனால் ஒவ்வொரு ஏழைகளின் வங்கிக் கணக்கிலும் ₹15 லட்சம் பணம் சேருமா?
ஈடி மற்றும் வருமான வரிக்கு முன்பே அண்ணாமலை ஏன் பினாமிகளை அடைகிறார்? யார் யாருக்கு உதவுகிறார்கள், யார் யாரை அச்சுறுத்துகிறார்கள்? அவர்கள் பணம் பெறுகிறார்களா? அவர்கள் பினாமிகள் என்பதற்கு என்ன ஆதாரம்? என கேள்வி எழுப்பினார்.
மேலும் அனைத்தும் நம் மக்களின் நேரத்தை வீணடிப்பவை. இதனால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காதபோது இல்லை, இதில் எங்களுக்கு எந்த விளக்கமும் தேவையில்லை.
இவ்வளவு ஊழல் கறுப்புப் பணத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்.. ஏன் மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் வரவில்லை? எந்த பயனும் இல்லாத இந்த பைல்களால் மக்கள் சலிப்படைகிறார்கள். இந்த நாடகம் மக்களுக்கு வேலை செய்யாது என தெரிவித்த அவர்,
பினாமி 1999 ஊழல் 2004 ஊழல் மீது அவர் இவ்வளவு ஆர்வம் காட்டும் போது, அண்ணாமலை ஏன் ஆருத்ரா தங்க மோசடி மற்றும் பிற மோசடிகளில் ஆர்வம் காட்டவில்லை? அவர்கள் அனைவரும் நேரடியாக மக்கள் பணத்தில் ஈடுபட்டவர்கள்.. மக்கள் பணத்தை சொரண்டி அடித்து எடுத்துள்ளனர்.
ஏன் அதில் ஆர்வம் காட்டி மக்களின் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. ஆருத்ரா தங்க மோசடியால் காஞ்சிபுரத்தில் ஒருவர் உயிரிழந்தார் என அண்ணாமலையை காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.