சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனான ஓபி.ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் பாலியல் தொல்லை தொல்லை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் காரைக்குடியை சேர்ந்த காயத்ரி தேவி என்பவர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் பாலியல் தொல்லை மீது புகாரளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓ.பி.ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி எனக்கு தோழி எங்கள் குடும்பத்தினரும் ஓ.பன்னீர் செல்வம் குடும்பத்தினரும் நண்பர்களாக பழகி வந்தோம்.
2020ஆம் ஆண்டு குடும்ப பிரச்னை காரணமாக எனது கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறேன் .இந்த நிலையில் ஏப்ரல் 1ம் தேதி ஓபி.ரவீந்திரநாத் எண்ணில் இருந்து போன் வந்தது.அந்த அழைப்பை எடுத்து பேசினேன்.
நன்றாக பேசிய அவர், ஒரு கட்டத்திற்கு மேல் ரொம்ப ஆபாசமாக பேசத் தொடங்கி ’ஆபாசமாக வீடியோ காலில் வா’ என்று அழைத்துக் கொண்டே இருப்பதாகவும், இதனை பொறுத்து கொள்ள முடியாமல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக அவர் தெரிவித்தார்.