கரூருக்கு மத்திய அரசு என்ன செய்தது என்றும் கடந்த 3 ஆண்டுகளாக தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருக்க கூடிய அண்ணாமலை என்ன செய்தார். ஒரு பெண்ணை குறிவைக்க நன்கு திட்டமிடப்பட்ட உத்தியை அரசியல் தளத்தில் பாஜக பயன்படுத்துவதாக காயத்ரி ரகுராம் (gayathri raghuram)கடுமையாக விமர்சித்து உள்ளார்.
தேர்தல் நேரத்தில் தான் எங்களுடைய ஞாபகம் உங்களுக்கு வருமா என்று கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை(jothimani) அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் நேருக்கு நேர் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் பட்டார்.அப்போது எம்பி ஜோதிமணி தொகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நன்றி தெரிவித்து வருகிறேன்.நீங்கள் வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட வந்துள்ளீர்கள் என்று ஆவேசமாக பேசினார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காயத்ரி ரகுராம் (gayathri raghuram)பதிவிட்டுள்ளதாவது:
ஓட்டு கேப்பதற்கு மட்டும் வந்தீர்கள். அதற்கு பிறகு இப்போது தான் வந்து உள்ளீர்கள். எங்கள் ஊருக்கு என்ன செய்து கொடுத்தீர்கள்” என்று கரூர் கிராம சபை கூட்டத்தில் கேள்வியெழுப்பியிருந்தார்.ஆனால் கரூருக்கு மத்திய அரசு என்ன செய்தது என்ற கேள்வி எழ வேண்டும். ஒரு பெண்ணை குறிவைக்க நன்கு திட்டமிடப்பட்ட உத்தி. அரசியல் தளத்தில் பெண்கள் பலவீனமான இலக்கு.
ஆனால் ஒரு பெண்ணாகவும், காங்கிரஸ் பெண்ணாகவும் அவர் தனது கட்சிக்காகவும் சில சமயங்களில் கரூர் களப்பணியில் குரல் எழுப்பியுள்ளார். மறக்கக்கூடாது. மத்திய அரசு கரூருக்கு ஏதாவது பிரத்யேகமாக வழங்கினால் மட்டுமே அதை உங்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க முடியும். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாததால் அவரால் அதிகம் வாங்க முடியாது.
அவர் கைகள் கட்டப்பட்டுள்ளன. பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் எதுவும் உங்களை சென்றடையாது. அதாவது 10 ஆண்டுகளாக கரூருக்கு பாஜக அரசால் எதுவும் எட்டப்படவில்லை, கடந்த 3 ஆண்டுகளாக தமிழக பாஜக மாநிலத் தலைவராக கரூரில் இருந்து வருகிறீர்கள் ஆனால் இன்னும் எதுவும் உங்களை அடையவில்லை காங்கிரஸ் எம்பி ஜோதிமணிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.