தனது சொந்த ஊரும் சொந்த தொகுதியில் 23 ஓட்டுகள் வாங்கிய அண்ணாமலை எல்லாம் ஜெயலலிதா,கருணாநிதி போன்று நானும் ஒரு தலைவர் என்று சொல்லிக் கொள்ளக் கூச்சமாக இல்லையா எனக் காயத்ரி ரகுராம் கேள்வி உள்ளார்.
பாஜக நிர்வாகிகளாக இருந்த சிஆர்டி நிர்மல் குமார், கண்ணன் உள்ளிட்டோர் பாஜகவிலிருந்து விலகிய அடுத்த நாளே எடப்பாடி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர் .
இந்த விவகாரம் தமிழக பாஜகவினர் இடையே வெறும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை இடம் கேட்ட பொழுது, நான் இங்கு பாஜக தலைவராக வந்து உள்ளேன்.
தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை. அண்ணாமலை தலைவராக வந்து உள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போல் தான் என் முடிவு இருக்கும். தலைவர்கள் முடிவு எடுத்தால் 4 பேர் கோபித்து கொண்டு வெளியே வருவார்கள். நானும் அந்த வரிசையில் தலைவர் தான். பா.ஜ.க.வில் மேனேஜராக இல்லை.
https://twitter.com/Gayatri_Raguram/status/1633117235404308484?s=20
கட்சி வளர்ச்சிக்கு எந்த முடிவு எடுப்பேன். வரும் காலத்தில் வேகத்தில் அதிகமாக தான் இருக்கும். குறைய போவதில்லை. திட்டி விட்டு விவசாயம் செய்யாமல் வேறு கட்சிக்கு போய் வாழ்க என கோஷம் தானே போடுகிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம், சொந்த ஊரில் சொந்த பூத்தில் அண்ணாமலை 1000 ரூபாய் கொடுத்தும் வாங்கி ஓட்டு 23 மட்டுமே. எதிர்த்து போட்டியிட்ட முகம் தெரியாத திமுக வேட்பாளரும் செந்தில் பாலாஜியோட வலது கைக்கு வலது கையா இருந்த திமுக வேட்பாளர் வாங்கி ஓட்டு 582 அதாவது 96% வாக்கு வாங்கி அண்ணாமலையை வெறும் 3% மட்டுமே வாங்கும் அளவு தான் இவர் தகுதி. சொல்லுங்க அண்ணாமலை நீங்கள் ஜெயலலிதா , கருணாநிதி போல் ஒரு தலைவர் என்று நீங்களே சொல்லி கொள்ள வெக்கமாக கூச்சமாக இல்லையா?என கேள்வி எழுப்பி உள்ளார்.