அனைவரும் எதிர்பாக்கப்பட்ட தமிழகத்தின் எதிர்க்கட்சியாக செயல்படும் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக்கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது.வானகரத்தில் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்திற்கு நடைபெறும் இடத்திற்கு ஓபிஸ் வந்தடைந்தார்.
இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட ஓபிஎஸ், மாற்றுப்பாதை வழியாக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்தார். அப்போது அங்கு குவிந்திருந்த ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மாறிமாறி கோஷங்களை எழுப்பினர். திருமண மண்டபத்திற்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதனால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் வெளியேற சொல்லி பழனிசாமி ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.திருமணமண்டபத்தில் பன்னீர்செல்வத்தை கண்டுகொள்ளாத பழனிசாமி ஆதரவாளர்கள்! பன்னீர்செல்வத்தை கண்டுகொள்ளாத பழனிசாமி ஆதரவாளர்கள். ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொண்டர்கள் துரோகி என முழக்கமிட்டதால் பொதுக்குழு மேடையில் இருந்து கீழே இறங்கினார் வைத்திலிங்கம்! தொடண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைஅச்சர் ஆர்.பி. உதயகுமாரும், வளர்மதியும் தொண்டர்களிடம் கேட்டு கொண்டனர். இந்த நிலையில் போலீசார் அந்த படுத்திக்கு வைத்து அனைவரையும் சமாதானம் படுத்தி அப்புறப்படுத்தினர்.இதனை தொடர்ந்து தொண்டர்கள் கலைந்து சென்றனர்