தன்னை விட வயது குறைந்த ஆண்களையும் தன்னை விட வயதில் மூத்த பெண்களையும் காதலித்து திருமணம் செய்துகொள்ளும் ட்ரெண்டை முதலில் விளையாட்டு வீரர்களும் திரை பிரபலங்களும் தான் அறிமுகபடுத்தினர் . அவர்களின் இந்த செயல் இன்று பட்டி தொட்டி எங்கும் பரவி உள்ளது .
இந்நிலையில் ‘தி காட்பாதர்’ மற்றும் ‘ஸ்கார்ஃபேஸ்’ ஆகிய படங்களில் தனது துடிப்பான நடிப்பால் மக்கள் மத்தியில் பிரபலமான ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆஸ்கர் நாயகன் அல் பசினோ, தனது 4வது குழந்தைக்கு விரைவில் தந்தையாக உள்ளார்.
தன்னுடைய ஆசை காதலியும், பிரபல ஹாலிவுட் நடிகையுமான நூர் அல்பல்லா மூலம், விரைவில் நான்காவது குழந்தைக்கு அல் பசினோ தந்தையாக போகும் செய்தி வெளியாகி அனைவரையும் ஆச்சிரியத்திலும் , அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
29 வயதாகும் நூர் அல்பல்லா ‘பில்லி நைட்’, ‘லிட்டில் டெத்’ மற்றும் ‘ப்ரோசா நோஸ்ட்ரா’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர் .
83 வயதாகும், அல் பசினோ, நூர் அல்பல்லாவுக்கு முன்னதாக ஜான் டர்னட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் ஏற்கனவே இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் அல் பசீனோ தனது இளம் காதலியான நூல் அல்பல்லா என்பவரை காதலித்து வந்த நிலையில், தற்போது 8 மாத கர்ப்பிணியாக அவர் இருப்பபதாகவும் விரைவில் இந்த ஜோடிக்கு குழந்தை பிறக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது .
ஊன்றி நிற்க துணை தேடும் வயதில் தன்னுடைய மகளை விட சிறிய வயது காதலி மூலம் அல் பசினோவுக்கு 4வது குழந்தை பிறக்க உள்ளது ஹாலிவுட் திரையுலகினர் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
அல் பசினோவின் இந்த செயலால் உலககெங்கும் இருக்கும் முரட்டு சிங்கிள்ஸ் மனதுக்குள் குமுறி வருகின்றனர்.மறுபக்கம் பலர் அல் பசினோ மற்றும் நூர் அல்பல்லாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.