இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை (gold price) ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு தற்போது வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து சவரன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
நேற்று தங்கம் விலை, கிராம் ரூ.5,565-க்கும், பவுன் ரூ.44,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,590-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை (gold price) சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, நேற்று வெள்ளி கிராம் ரூ.76.20 ஆகவும், கிலோ ரூ.76,200 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று வெள்ளியின் விலை ரூ.1.30 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்கப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நகைகளுக்கு நாளை முதல் ஹால்மார்க் உடன் 6 இலக்க எண் கட்டாயம் என்பதால் தங்கம் விலை அதிகரித்துள்ளது.