தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மழைக் காலங்களில் உதவும் வகையில் ரெயின் கோட் மற்றும் பூட்ஸ் வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நடைபெற்று வருவதால் கடந்த மாதம் தமிழகம் முழுவதும் தொடர் கனமழை பெய்தது.
இதனால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் மழைநீர் தேங்கி பொது மக்கள் மட்டும் இன்றி மாணவர்களும் பல நாட்கள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது மழை சற்று தணிந்தாலும் அவ்வப்போது மழை பெய்து வருவதால், மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவதோடு உடல் நிலையும் பாதிக்கபடுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் மற்றும் பூட்ஸ் வழங்க முடிவு செய்துள்ளது.
குறிப்பாக அதிகமாக மழை பெய்யும், மலை பிரதேச மாவட்டங்களில் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு அதிகமாக இருப்பதால் அதனை தவிர்க்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ரெயின் கோட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.