AI புகைப்படங்களை அடையாளம் காண புதிய தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை எளிதில் கண்டறிய ஒரு புதிய மென்பொருளை வடிவமைக்க உள்ளது கூகுள். Al புகைப்படங்களை Watermark மூலம் அடையாளப்படுத்த SynthID என்ற தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் உருவாக்க உள்ளது கூறப்படுகிறது.
Also Read : “தெருக்கள் தோறும் கஞ்சா அரசுக்கு எப்போ வரும் பொறுப்பு” – ராமதாஸ் விளாசல்..!!
Content Provenance and Authenticity (C2PA) என்ற அமைப்புடன் இணைந்து, டிஜிட்டல் புகைப்படங்களின் உண்மைத் தன்மை ஆராய்தல், DeepFake எனப்படும் போலியாக வடிவமைக்கப்படும் புகைப்படங்களை கண்டறிதல் உள்ளிட்டவற்றை செயல்படுத்த நவீன தொழில்நுட்ப கருவிகளை கூகுள் வடிவமைக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Al என்ற ஒன்று உருவாக்கப்பட்ட நாள் முதல் அதனை பயன்படுத்தும் மக்களுக்கு பல வகையில் பயன்பட்டு வந்தாலும் சிலருக்கு அவை பாதகமாகவும் இருப்பது யாராலும் மறுக்கமுடியாத ஒன்று.