இந்திய மத்திய வங்கியில் காலியாக உள்ள 1000 மேலாளர் காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 15.07.202 ஆகும். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த பணிக்கான கல்வித்தகுதி, பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனவும், Certified Associate of Indian Institute of Bankers படிப்பு முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவமாக விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு வங்கியில் 3 ஆண்டுகள் அதிகாரியாக இருந்திருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு வங்கியில் எழுத்தர் பதவியில் 6 ஆண்டு காலம் அனுபவத்துடன் இருக்க வேண்டும்.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது வரம்பு 31.05.2023 அன்று 35-க்கு கீழ் இருக்க வேண்டும் எனவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.850 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.175 ஐ விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும், https://ibpsonline.ibps.in/cbimmjun23/ என்ற அங்கீகரிக்கப்பட்ட வலைதள முகவரியில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.