CRPF jobs |சி.ஆர்.பி.எப் எனப்படும் (Central Reserve Police Force) மத்திய போலீஸ் படையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மொத்தமாக 169 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்:
விளையாட்டு பிரிவில் ( sports quota) வருபவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதாவது தேசிய அல்லது சர்வதேச அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் அல்லது பள்ளி,
கல்லூரி, பல்கலைக்கழகம் அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றதற்கான சான்றிதழ் வைத்திருக்கும் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க: Physical Education-உடற்கல்வி ஆசிரியர் பணி.. நேர்காணல் – முழு விவரம் உள்ளே!
கல்வித்தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொருத்தவரை 15.02.2024 நிலவரப்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
அதே சமயம் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
தேர்வு முறை என்பது ஆவணங்கள் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை என வரிசையாக தேர்வு முறை இருக்கும்.
விண்ணபிக்க விரும்புவோர் https://recruitment.crpf.gov.in என்ற இனையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். 15.02.2024 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகும்.
இதையும் படிங்க: TN Assembly Issue | ‘துணைத்தலைவர் இருக்கை விவகாரம்..” ஜெயக்குமார் ‘நச்’ பதிலடி!
சி.ஆர்.பி.எப் மத்திய அரசு தொடர்பான அறிவிப்பு:
மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை தவிர, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் எழுதலாம் என, மத்திய அரசு முதன்முறையாக அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
- மத்திய ஆயுதப்படைகள்
- சி.ஆர்.பி.எப் -மத்திய ரிசர்வ் போலீஸ் படை
- பி.எஸ்.எப்- எல்லை பாதுகாப்பு படை,
- சி.ஐ.எஸ்.எப்- மத்திய தொழிலக பாதுகாப்பு படை உள்ளன.
இந்த ஆயுதப்படைகளுக்கான காவலர் தேர்வை(CRPF jobs ) , ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில், எஸ்.எஸ்.சி., எனப்படும், பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1757759675087388673?s=20
இந்நிலையில், மத்திய ஆயுதப்படைகளுக்கான காவலர் தேர்வை, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை தவிர, 13 பிராந்திய மொழிகளில் எழுதலாம் என, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.