governor house award-சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விருதுகள் பெறும் நிறுவனங்கள், தனிநபர்கள் குறித்த அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
‘சமூக சேவை’ மற்றும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ ஆகிய பிரிவுகளின்கீழ் விருது வழங்கப்படுவது குறித்த அறிவிப்பை, ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு ஜூன் 4-ம் தேதி வெளியிட்டார்.
விருதுகளுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் ஆய்வு செய்யப்பட்டு, அவர்கள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், விருதுகள் வென்றவர்கள் அறிவிக்கப்படுகின்றனர்.
Also Read :https://itamiltv.com/here-kanyakumari-to-ayodhya-train-details-for-ayodhya-ram-temple-inauguration/
அதன்படி, ‘சமூக சேவை’ (நிறுவனம்) பிரிவில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ‘ஊரக வளர்ச்சி அமைப்பு’ (Rural Development Organization) சமூக சேவைக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆளுநர் மாளிகையின் சார்பாக வழங்கப்படும்.
இந்நிறுவனம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் மற்றும் பழங்குடியினருக்கு கல்வி, சுகாதாரம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துதல்,
ஆகியவற்றில் கவனம் செலுத்தி சேவை செய்து வருவதன் அடிப்படையில் இந்நிறுவனத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
‘சமூக சேவை’ (தனிநபர்கள்) பிரிவில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த திரு.ஜி.மதன் மோகன், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த திரு.எம்.குபேந்திரன் மற்றும் தேனி சேர்ந்த திரு.என்.ரஞ்சித்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆளுநர் மாளிகையின் சார்பாக வழங்கப்படும். திரு.ஜி.மதன் மோகன், கல்வி, நீர் மேலாண்மை, பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் பெரும் பங்களிப்பை அளித்துள்ளார்.
திரு.எம்.குபேந்திரன், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதிலும், தனது ஆட்டோரிக்க்ஷாவை பயன்படுத்தி மரம் நடுதல் மற்றும் அதனை ஊக்குவித்தல்,
தொடர்பான செய்திகளை செய்திகளை வீடுதோறும் வீடுதோறும் கொண்டு சேர்த்தல் மற்றும் பயணிகளிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தல் போன்ற முயற்சிகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதை பொறுத்தவரை, நிறுவனம் பிரிவில், மதுரை மாவட்டம், பசுமை அமைதி காவலன் என்ற தொண்டு நிறுவனத்துக்கும் தனிநபர் பிரிவில், தருமபுரி ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர் ஜி.தாமோதரன்,
திருநெல்வேலி சி.முத்துகிருஷ்ணன், விருதுநகர் வி.தலைமலை ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது.
Also Read :https://x.com/ITamilTVNews/status/1746116316841558419?s=20
விருதுகள் பெறும் நிறுவனங்களுக்கு தலா ரூ.5 லட்சம், சான்றிதழும், தனிநபர்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது.
ஜன.26-ம் தேதி ஆளுநர் மாளிகையில்(governor house award) நடைபெறும் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவியால் விருதுகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.