கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல், திருச்சி சீராத்தோப்பில் உள்ள பாரத பண்பாட்டு பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நினைவிடத்தை மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் இராமகோபாலன் புகைப்படத்தை பார்த்ததும் தேம்பி, தேம்பி அழுதார். உடனே அருகில் இருந்த இந்து முன்னணியினர் அவரை ஆசுவாசப்படுத்தி அழைத்து சென்றனர்.
தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என்று சொல்லி வருகிறது என்ற கேள்விக்கு,நான் ஆளுநராக வந்திருக்கிறேன் இதற்க்கு என்னால் பதில் சொல்ல இயலாது என்றார்.