தமிழக முதல்வரை புகழ்ந்து பேசிய ஆளுநர்..!

Spread the love

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபை கூட்டத்தில் பேசியபோது முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் தமிழக சட்டசபை கூடும்போது கவர்னர் வந்து உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.

வணக்கம் என தமிழில் சொல்லி உரையை தொடங்கினார் கவர்னர் ஆர்.என்.ரவி.

அதன்பின்னர், கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.

கவர்னர் ஆர்.என்.ரவி உரையில் பேசிய முக்கிய தகவல்கள்:-

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனது முதல்முறையாக உரையாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இலங்கை தமிழர் நலனுக்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை தமிழரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசை அனுமதிக்க கூடாது.

நாட்டிலேயே கொரோனா தடுப்பூசி போடும் திட்டம், தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கான நலத்திட்ட உதவிகள் தொடரும்என உறுதி

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் கருணாநிதி வழியில், சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம் காக்கப்படும்,.

தமிழ்நாட்டில் 8.55 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒமிக்ரான் பரிசோதனை நடத்தும் ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழ்நாட்டில் தான் .

தமிழ்நாட்டில் 86.95 சதவீதம் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாடு அரசு நிதியுதவி அளித்துள்ளது.

வருமுன் காப்போம் திட்டம் தமிழ்நாடு அரசால் அமல்படுத்தப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கியவர்கள் உயிரை காக்க நம்மை காப்போம் 48 திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான வருமான வரி வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.1297 கோடியில் 2.15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பு வழங்குகிறது.

ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் நடைமுறை ஜூன் மாதத்துக்குள் நிறுத்திவிடும். இன்னும் 3, 4 ஆண்டுகளுக்கு வருவாயை ஈடுகட்டும் வகையில் ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தர வேண்டும். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு லட்சம் கோடி டாலராக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.கொரோனா இடருக்கு மத்தியில் குறுகிய காலத்தில், தமிழக பொருளாதாரத்தை வலுப்படுத்த முனையும் முதலமைச்சருக்கு பாராட்டுகள்

இந்தியாவில் சிறந்த முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2.29 லட்சம் மனுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை தமிழக அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது.

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, கொள்கைகள் வகுத்து தமிழ்நாடு அரசு செயல்படுகிறது

தெற்காசியாவில் அதிக முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக, தமிழ்நாடு அரசு திகழ்கிறது.

நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் வேண்டாம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது; இருமொழிக் கொள்கையை அரசு தொடர்ந்து கடைபிடிக்கும்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கைப்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகளில் தமிழ் பயன்பாட்டை அரசு உறுதி செய்யும் என்று கூறினார்.


Spread the love
Related Posts