சட்டசபை கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்த அதிமுக, விசிக..!

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் தமிழக சட்டசபை கூடும்போது கவர்னர் வந்து உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கவர்னர் ஆர்.என். ரவி ‘வணக்கம்’ என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார்.

இந்நிலையில், கவர்னர் உரையை புறக்கணித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அம்மா கிளினிக் மூடல், அம்மா பல்கலைக்கழகம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் உரையை புறக்கணித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனை தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காததை எதிர்த்து விடுதலை சிறுத்தை எம்.எல்.ஏ.க்கள் கவனர் உரையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Total
0
Shares
Related Posts