Tamilnadu Lockdown | ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு..வழிபாட்டுத் தலங்களுக்கு 3 நாட்கள் தடை..! – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம் ஒமிக்ரான் தொற்றும் தமிழகத்தில் அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென மத்திய அரசு, மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்திலும் கடந்த 31ம் தேதி வரை கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது.

அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா கட்டுபாடுகள் ஜனவரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. சென்னை கலைவாணர் அரங்கில் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கட்டுப்பாடுகள் குறித்து மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி,சனி ஞாயிற்று ஆகிய மூன்று நாட்கள் வழிபாட்டுத்தலங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts