ஆளுநர்கள் ஃபைல்களை தூங்க வைப்பதை நிறுத்திக் கொண்டு மாநில அரசுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
காலம் காலமாக மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இருக்கும் பஞ்சாயத்து இன்று வரை தொடர்ந்து வரும் நிலையில் தமிழக உள்பட பல்வேறு மாநில அரசுகள் ஆளுநர்கள் மேல் வழக்கு போடு உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்று விட்டனர். உச்சநீதிமன்றமும் மாநில அரசுகளுடன் ஆளுநர்கள் ஒத்துழைத்து செல்ல அறிவுரை கூறியது .
இந்நிலையில் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி சில பல காரணங்களை கூறி திருப்பி அனுப்பினார். இதற்கு கண்டனம் தெரிவித்து மீண்டும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படட்டு உள்ளது .
இந்நிலையில் ஆளுநர்கள் ஃபைல்களை தூங்க வைப்பதை நிறுத்திக் கொண்டு மாநில அரசுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவரது கண்டதை பதிவு செய்துள்ளார் .
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
ஆளுநர்கள் மசோதாக்களின் மீதான நடவடிக்கைகளை தடுக்கவோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் இயல்பான அதிகாரத்தை முறியடிக்கவோ முடியாது என்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி இருப்பது மிகுந்த வரவேற்ப்பிற்குரியது
இனியாவது ஆளுநர்கள் தங்கள் அதிகார வரம்பை மீறி உளறுவதையம், ஃபைல்களை தூங்க வைப்பதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.