சுதந்திர தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை கூட்டாக புறக்கணிப்பதாக திமுகவின் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்திய திருநாட்டின் 77வது சுதந்திர தின நாளை மறுநாள் ஆகஸ்ட் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
நாட்டு மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் இந்த புனித நாளில் ஏராளமான கலை நிகழ்ச்சிகளும் ராணுவ வீரர்களின் பாரம்பரிய பரைடும் நடத்தப்படும் .
Also Read : சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை..!!
இந்நிலையில் சுதந்திர தின விழாவையொட்டி தமிழக ஆளுநர், அனைத்துக் கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைப்பது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனைத்துக் கட்சிகளுக்கும் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் .
இதனையடுத்து இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை கூட்டாக புறக்கணிக்கப் போவதாக திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
அதன்படி காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.