தமிழக மக்களுக்காக அரசு தரப்பில் எடுக்கப்பட்ட பல நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (Govt Schemes) மக்களின் பயன்பாட்டிற்காக திறத்து வைத்தார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் ₹29.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காசநோய், நெஞ்சக மருத்துவ பிரிவுக் கட்டடம் திறப்பு
இன்போசிஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து ₹30 கோடி செலவில் மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டுக்கு வழங்கினார்
ஈரோடு, தூத்துக்குடி, கோபி, சத்தி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்ட புதிய வணிகவரி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு
204.57 கோடி செலவில் 1374 புதிய வகுப்பறை கட்டடங்கள், 80.85 கோடி செலவில் துறைக் கட்டடங்கள், ₹48.56 கோடி செலவில் பள்ளிக் கட்டடங்கள், ₹3.92 கோடி செலவில் நூலக கட்டடங்கள் திறக்கப்பட்டன
இதேபோல் மத்திய அரசு நிறுத்திய சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை நாமே வழங்க முடிவெடுத்துள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
மத்திய பா.ஜ.க நிறுத்திய உதவித்தொகை இனித் தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்படும் .
சிறுபான்மையினரின் சமூக – கல்வி- பொருளாதார வளர்ச்சிக்கும் அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கும் என்றும் துணைநிற்பது கழக அரசுதான் என இதன் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
பள்ளிகளில், கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் பராமரிப்பு (Govt Schemes) பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் கோடைகாலத்தில் மின்தடை இருக்காது.
வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் ரூ. 25.15 கோடி செலவில் ஈரோடு மற்றும் தூத்துக்குடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடங்கள் மற்றும் கோபிச்செட்டிப்பாளையம்,
Also Read :https://itamiltv.com/1-hour-rest-daily-for-ayodhya-rama/
சத்தியமங்கலம், துறையூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடங்கள்,
அரகண்டநல்லூர் மற்றும் சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் ரூ. 3.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்