இந்தியாவின் தற்போதைய ஒமைக்ரான் நிலவரம் – மத்திய சுகாதார துறை தகவல்!

great-shock-nearly-a-thousand-omega-impact-in-india-delhi
great shock nearly a thousand omega impact in india delhi

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 961 ஆக அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ‘ஒமைக்ரான்’ அடுத்த சில நாட்களில் 100க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியது. அந்த வகையில் இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 961ஆக அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 263 பேரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 252 பேரும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

great-shock-nearly-a-thousand-omega-impact-in-india-delhi
great shock nearly a thousand omega impact in india delhi

டெல்லி 263, மகாராஷ்டிரா 252, கேரளா 65, தெலங்கானா 62, குஜராத் 97, ராஜஸ்தான் 69, தமிழகம் 45, கர்நாடகா 34, ஆந்திர பிரதேசம் 16, மத்தியப் பிரதேசம் 9, மேற்கு வங்கம் 11, ஹரியானா 12, ஒடிஷா 9, ஜம்மு காஷ்மீர் 3, உத்தரப்பிரதேசம் 2, சண்டிகர் 3, லடாக் 1, உத்தரகாண்ட் 4, ஹிமாச்சல் பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 320 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.

Total
0
Shares
Related Posts