பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் வீட்டில் நடந்த சோக சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதல், கல்லூரி, வழக்கு எண் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர், இயக்குநர் பாலாஜி சக்திவேல். திரைப்படங்களாக இந்த படங்கள் திரைப்பட விழாக்களிலும் சரி, திரைப்பட இயக்குநர்களாலும் சரி பெரிதும் பாராட்டப் படக் கூடியவை. ரசிகர்களால் பெரிதும் மதிக்கப்படக் கூடிய அங்கீகாரத்தை பெற்ற படங்களாகவும் உள்ளது.
எளிய மனிதர்களின் அன்றாட வாழ்வில் இழையோடும் எதார்த்த கதைகளே இவருடைய படங்களின் கதைக்கருவாக அமைந்திருப்பன. இவருடைய படங்கள் நீண்ட கால இடைவெளிகளில் உருவாகின்றன என்கிற ஒரே வருத்தம் தான் ரசிகர்களிடம் இருக்கிறதே தவிர, இவருடைய படம் அடுத்து எப்போது வரும் என்கிற ஆவல் அவர்களிடத்திலே அதிகம் காண முடிகிறது.
இயக்குநராக மட்டுமல்லாமல், ‘அசுரன்’ திரைப்படத்தில் காவலராகவும் இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடித்திருப்பார். தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் பாலாஜி சக்திவேல், ஒரு வில்லத்தனமான காவலராக மிரட்டியிருப்பார்.
இந்நிலையில் இயக்குநர் பாலாஜி சக்திவேலின் தந்தையார் மரணம் அடைந்திருக்கும் செய்தி கலங்கச் செய்துள்ளது. அண்மைக் காலங்களில் திரைத் துறையை சேர்ந்தவர்களின் மரணமும் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி வந்தன.
கடந்த வாரங்களில் திரைப்பட பாடகர் மற்றும் நடிகர் மாணிக்க விநாயகம், திரைப்பட இயக்குநர் ஆச்சார்யா ரவி உள்ளிட்டோரின் மரணத்தால் திரைத்துறையினர் சோகமடைந்தனர். இந்நிலையில் பாலாஜி சக்திவேலின் தந்தையார் சக்தி வடிவேல் (84) இன்று காலமானார்.
மேற்படி, சக்தி வடிவேல் அவர்களது இறுதிச் சடங்கு, சென்னை ராமாபுரத்தில் இருக்கும் இவர்களது வீட்டில் இருந்து போரூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு நிகழ்கிறது.