ஹரியானாவில் திருமணமாகாத ஆண்கள் ,பெண்கள் மற்றும் விதவைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக(pensionscheme) ரூ.2,750 வழங்க இருப்பதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் 45 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வருமானம் குறைவாக உள்ள திருமணமாகாதவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2,750 ஓய்வூதியமாக வழங்க இருப்பதாகவும்,அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.80 லட்சத்துக்கு குறைவாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு மாதம் ரூ.2,750 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற திருமணமாகாத 40 முதல் 60 வயது உட்பட்ட கணவனை இழந்த விதவைகளுக்கு ரூ.2,750 ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும்,அவர்களின் ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் மட்டுமே இந்த ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த மாத வருமானம் தனது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் என்றார். ‘வருமானம் மிகக் குறைவாக உள்ளவர்கள், மரியாதையான வாழ்க்கையை நடத்த ஏதாவது உதவிகள் கிடைக்கும், அதைத்தான் நாங்கள் செய்துள்ளோம்’ என்ற முதல்வர் அரசின் இந்த முடிவுகளால், பொது கருவூலத்தில் ஆண்டுக்கு ரூ.240 கோடி கூடுதல் சுமை அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
ஹரியானா மாநிலத்தில் சுமார் 65,000 திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்கள் மற்றும் 5,687 விதவைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.