Headlines: திமுக சார்பில் அமைதிப் பேரணி
Headlines : அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் சேப்பாக்கத்தில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி நடைபெறும் அமைதிப்பேரணியில் அமைச்சர்கள், திமுக எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அண்ணாவின் 55வது நினைவு நாள் – எடப்பாடி பழனிசாமி மரியாதை
அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் அண்ணா உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்
திருவிக கல்லூரி முதல்வர் கீதா வழக்குப்பதிவு
திருவாரூரில் மோசடி புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருவிக கல்லூரி முதல்வர் கீதா மீது 5 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஆவணங்களை கிழித்ததாகவும், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கீதா மீது தஞ்சை மண்டல கல்லூரி இணை இயக்குநர் தனராஜன் புகார் அளித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் வருகை
டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.
https://x.com/ITamilTVNews/status/1753648031034179866?s=20
ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ களை பாஜக விலைகொடுத்து வாங்க முயற்சிப்பதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருந்த நிலையில் அதற்கான ஆதாரங்களை கேட்டு போலீசார் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா பதிலடியை எதிர்கொள்ளும் – ஈராக்
ஜோர்டனில் ஈரான் ஆதரவு போராளிகள் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது.
இதையும் படிங்க : kilambakakam பேருந்து நிலையம்- அரசுக்கு madras high court பாராட்டு
அமெரிக்காவின் தாக்குதல் இறையாண்மையை மீறும் செயல் என ஈராக் தெரிவித்துள்ள ஈராக், தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடியை எதிர்கொள்ளும் என தெரிவித்துள்ளது.
லாலா அமர்நாத்தின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து வீரர்
லாலா அமர்நாத்தின் 72 ஆண்டுகால சாதனையை முறியடித்த இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முறியடித்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் போது இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்
ஆபரணத்தங்கத்தின் விலை குறைவு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.
தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,870-க்கும் சவரன் ரூ.46,960-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும் பார் வெள்ளி ரூ.77,000-க்கு விற்கப்படுகிறது.