Headlines : முடிவுற்ற 13 திட்டப் பணிகள் திறப்பு
Headlines : குடிநீர் வழங்கல்துறை சார்பில் 11.98 கோடி மதிப்பில் முடிவுற்ற 13 திட்டப்பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் ரூ.152.67 கோடி மதிப்பிலான 52 புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
மின்வாரிய களப்பணிகளைக் கண்காணிக்க செயலி.
மின்வாரிய களப்பணிகளைக் கண்காணிப்பதற்காக செயலி (FSM) வடிவமைக்கப்ட்டுள்ளது.
மின் இணைப்பை துண்டித்தல், இணைப்பு வழங்குதல், புதிய இணைப்பு ஆகியவை பற்றி செயலி மூலம் அறியலாம்.
பழுதான மீட்டரை சரி செய்தல், புகார்கள் தெரிவித்தல் உள்ளிட்ட 7 சேவைகளை பெறலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
சிறந்த உணவுகள் கிடைக்கும் இடங்களில் இந்தியாவின் 5 நகரங்கள்
Taste Atlas நடத்திய உலகிலேயே சிறந்த உணவுகள் கிடைக்கும் டாப் 100 இடங்களில் இந்தியாவின் 5 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
மும்பை 35வது இடத்திலும், ஹைதராபாத் 39வது இடத்திலும், டெல்லி 56வது இடத்திலும், சென்னை 65வது இடத்திலும், லக்னோ 95வது இடத்திலும் உள்ளன.
உணவகங்களுக்கு கூகுள் அளிக்கும் ரேட்டிங்கை அடிப்படையாகக் கொண்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே தோ்வு அட்டவணை
நிகழாண்டுக்கான ரயில்வே தோ்வு அட்டவணையை ரயில்வே தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதில் துணை லோகோ பைலட் தோ்வுக்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், வரும் ஜூன் மாதத்துக்குள் தொழில்நுட்பப் பிரிவுக்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
சாம்பாய் சோரன் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
தெலுங்கானாவில் இருந்து ஜேஎம்எம்-காங். எம்.எல்.ஏக்கள் ஜார்க்கண்ட் திரும்பினர்.
ஜார்க்கண்ட் சட்டசபையில் பெரும்பான்மைக்கு 41 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் தமக்கு 47 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
https://x.com/ITamilTVNews/status/1753790495669772309?s=20
ஜூலையில் தொழில்நுட்பம் சாராத பிரிவு, இளநிலைப் பொறியாளா், மருத்துவம் சாா்ந்த பிரிவுகளுக்கும் தோ்வுகள் அறிவிக்கப்படவுள்ளன.
சென்னை முன்னாள் மேயரின் மகன் மாயம்.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி, இமாச்சல் அருகே சட்லுஜ் நதியில் மாயமாகி உள்ளார்.
இதையும் படிங்க : india vs england -கில்லுக்கு மாற்றாக ஃபீல்டிங்கில் சர்ஃப்ராஸ் கான்.
இமாச்சல் அருகே சட்லுஜ்நதியில் கார் கவிழ்ந்த நிலையில் காரில் சென்ற 3 பேரில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனை காணவில்லை.
கார் ஓட்டுநரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றொருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்ட்டுள்ளார். சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி தீவிரமாக நடை பெறுகிறது.
ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் விளாசி அவுட்டானார்! தனது 4வது டெஸ்ட் போட்டியிலேயே இரட்டை சதம் விளாசயுள்ளார்.
ஆபரணத்தங்கத்தின் விலை சரிவு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.160 குறைந்து ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,850-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.76.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.