(Headlines)நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் குழு ஆகிய குழுக்களை திமுக தலைமை அமைத்துள்ளது.
திமுக எம்.பி கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது
இந்த குழுவில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா,டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், கோவி. செழியன், ராஜேஷ்குமார், எழிலரசன், அப்துல்லா, எழிலன், மேயர் பிரியா குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக எம்.பி டி.ஆர்.பாலு தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்ட்டுள்ளது.
இதையும் படியுங்க : https://itamiltv.com/late-onset-of-frost-on-kodaikanal-impact-on-normal-life/
(Headlines) இந்த குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க இன்று மாலை பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்!
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை
நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டி
புதுக்கோட்டை அடுத்த முக்காணிப்பட்டியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிது. இதில் 650 காளைகளும், 350 காளையர்களும் பங்கேற்றுள்ளனர்.
https://x.com/ITamilTVNews/status/1748220627990003724?s=20
சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து
வதோதரா பகுதியில் உள்ள ஹரனி ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 14 பள்ளி மாணவர்கள், 2 ஆசிரியர்கள் என 14 பேர் உயிரிழந்துள்ளார்.
படகில் பயணித்த நிலையில், நீரில் தத்தளித்த 27 மாணவர்கள் மாணவர்களை மீட்பு படையினர் காப்பாற்றி கரை சேர்த்தனர்.
18 பேர் மீது வழக்குப்பதிவு
குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மன்னிப்பு கோரினார் நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ படம் சர்ச்சைக்குள்ளாகி ஒடிடி தளங்களில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ரசிகர்களிடம் நடிகை நயன்தாரா மன்னிப்பு கோரினார்!
ஆஸ்திரேலியா முதலிடம்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது.
இலங்கை அணி வெற்றி
தங்கத்தின் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 5,810க்கும் சவரன் ரூ. 46,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசுகள் உயர்ந்து ரூ. 77.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.