Headlines : ஸ்பெயினில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தும் தமிழ்நாடு
Headlines : ஸ்பெயினில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகிறது.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக எட்டு நாட்கள் அரசு முறை பயணமாக முதலமைச்சரின் மு க ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளார் மாநாட்டில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார்.
அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!
அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.
134 முனைவர்கள் (Phd) பட்டம், 184 பதக்கம் பெற்ற பட்டதாரிகள் என 348 பேர் நேரடியாக பட்டம் பெற்றனர்.
சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்.
அதிமுக ஆலோசனை கூட்டம்
சென்னையில் அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
தொகுதி பங்கீட்டு குழுவை தொடர்ந்து, அதிமுக பிரசாரக் குழு, விளம்பரக் குழுவின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
ஹஜ் புனித பயணம் செல்வோருக்கான தேர்வு
இந்தாண்டுக்கான ஹஜ் புனித பயணம் செல்வோரை தேர்வு செய்வதற்கான குலுக்கல் டெல்லியில் இன்று காலை நடைபெற உள்ளது. இதில் தேர்வாகும் பயணிகளுக்கு SMS மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
பட்டாசு விபத்து
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
வசக்காரப்பட்டி தாளமுத்து பட்டாசு ஆலையில் கடந்த ஜனவரி 24ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் சம்பவ இடத்திலும், ஒருவர் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர்.
Natham : மீண்டும் ஒரு மது கொலை
இந்த நிலையில், சுந்தரமூர்த்தி என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – இளைஞர் உயிரிழப்பு
சென்னை, ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ பணிக்காக சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
மெட்ரோ நிர்வாகத்தின் கவனக்குறைவால் இளைஞர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆபரண தங்கத்தின் விலை அதிகரிப்பு
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.5,845-க்கும், ஒரு சவரன் ரூ.40 உயர்ந்து ரூ.46,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 20 பைசா விலை உயர்ந்து ரூ.77.70-க்கும், ஒரு கிலோ ரூ.200 உயர்ந்து ரூ.77,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.