ஓமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக சர்வதேச விமான பயணிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவியதை அடுத்து அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசிகளும் முழுவீச்சில் செலுத்தப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைவடைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தென்ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவான ஒமைரோன் சில நாடுகளில் கண்டறியப் பட்டுள்ளது.
அதன்படி பிரிட்டன், உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தென் ஆப்ரிக்கா, இஸ்ரேல், ஹாங்காங், சிம்பாப்வே, சிங்கப்பூர், சீனா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, மொரீஷியஸ், நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஓமைக்ரான் ஆபத்து கொண்ட நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அங்கு இருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் இந்தியாவில் விமான நிலையத்தில் வந்து இறங்கியதுமே அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பரிசோதனை முடிவு வரும் வரை அவர் விமான நிலையத்திலேயே தங்கி இருந்து அதில் நெகட்டிவ் சான்றுதல் வந்தால் மட்டுமே பயணிகள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.