இந்தியா முழுவதும் வெப்பநிலை (heatwave) அதிகரித்துவரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் உத்தரபிரதேசம், பீகார், சிக்கிம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் மேற்கு வங்காளத்தின் கங்கை நதியின் சில பகுதிகளில் தொடர்ந்து வெப்ப நிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரியானா போன்ற மாநிலங்களில் வெப்பநிலை (heatwave45) டிகிரி செல்சியஸை எட்டியுள்ள நிலையில், சில நாட்களாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவி வருகிறது. இதேபோல், உத்தரபிரதேசத்தின் ஹமிர்பூர் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இடங்களில் 44.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
முன்னதாக, நேற்று (ஏப்ரல் 18), பீகார், மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவானதை அடுத்து வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா:
பஞ்சாபின் பதிண்டாவில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அமிர்தசரஸ் மற்றும் பாட்டியாலாவில் முறையே 36.6 மற்றும் 41.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
ஹரியானா மாநிலம் ஹிசார் இந்த கடும் வெப்பத்தில் அதிகபட்சமாக 41.4 டிகிரி வெப்பநிலையை எட்டியுள்ளது.
டெல்லி:
தேசிய தலைநகரில் வெப்பமான வானிலை நீடித்து வருகிறது, சில வானிலை நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைந்தது ஐந்து டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது.
பீகார்:
பீகார் தலைநகர் பாட்னாவில் அதிகபட்சமாக 44.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. செவ்வாயன்று ஷேக்புரா மாவட்டத்தில் 44.4 டிகிரி செல்சியஸ் வெப்பமும், ஜமுய், நவாடா மற்றும் ரோட்டாஸ் ஆகிய இடங்களில் 43,2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
மேலும், பெகுசராய், கயா, அர்வால், போஜ்பூர் மற்றும் முங்கா ஆகிய பகுதிகளுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளம்:
அதிகரித்து வரும் வெப்பநிலையுடன், கடந்த வார இறுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அனைத்து கல்வி நிறுவனங்களையும் “கடுமையான” வெப்ப அலை நிலைமைகளுக்கு மத்தியில் அடுத்த வாரத்தில் மூடுமாறு அறிவுறுத்தினார். சில நாட்களாக பள்ளியிலிருந்து வந்த பிறகு குழந்தைகளுக்கு தலைவலி மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேகாலயா:
மேகாலயாவின் வெஸ்ட் கரோ ஹில்ஸ் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள பள்ளிகள் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்று மாநிலத்தின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயர்ந்து சில மாநிலங்களில் 40 டிகிரியைத் தொடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.