தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை தீவிரம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுகாக்களில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (24.11.2023) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.