தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தால் கேரளா, கர்நாடக உள்ளிட்ட தமிழகத்தை நெருங்கிணையுள்ள மாநிலங்களில் கடந்த சில நாட்களாக அதிகனமழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 3 நாட்களுக்கு தொடரும்.
Also Read : மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் என்ன..? – சீமான் அட்டாக்..!!
இதேபோல் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது . நீலகிரி, கோவை மாவட்ட மலைப் மலைப்பகுதிகளிலும் திருப்பூர், தேனி, திண்டுக்கல் மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்யும்.
தமிழ்நாட்டில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.