தூத்துக்குடியில் கனமழை பெய்து வரும் நிலையில் தண்டவாளத்தில் தேங்கி நிற்கும் மழைநீரின் காரணமாக தூத்துக்குடிக்கு பதில் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து சில ரயில்கள் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
மழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய 4 ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
தூத்துக்குடி-மைசூரு விரைவு ரயில் (16235) மாலை 05.15க்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும்
சென்னை செல்லும் முத்துநகர் விரைவு ரயில்(12694) இரவு 08.25க்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும்
தூத்துக்குடி-பாலக்காடு விரைவு ரயில் (16791) இரவு 10 மணிக்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும்
தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் (16766) இரவு 10.50 மணிக்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும்
இதுமட்டுமின்றி கனமழையின் காரணமாக பயணிகள் ரயில் 3 ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மாலை 6.25: தூத்துக்குடி – திருநெல்வேலி பயணிகள் ரயில் ரத்து
இரவு 10.30: தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரயில் ரத்து
இரவு 8.25: வாஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.