தமிழகத்தில் கடலூர் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெய்த தொடர் கனமழை காரணமாக பல நீர் நிலைகள் நிரம்பிஎ தோடு பல பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியது.
தற்போது தமிழகத்தின் பல நகரங்கள் வெள்ளத்தில் இருந்து மீண்டு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நாளை அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் பொதுவாக சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.