Heavy rains in Pakistan : பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 3 நாட்களாக பாகிஸ்தானில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப், கைபர் பக்துவா, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இந்த கனமழை காரணமாக ஒரு சில மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கனமழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வெள்ளத்தில் மிதக்கும் துபாய் – 6 விமானங்கள் ரத்து!
இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
கனமழை, வெள்ளம், மின்னல் போன்ற இயற்கை பேரிடர்களால் அந்நாட்டில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். தற்போது பொழிந்து வரும் கனமழை மேலும் சில நாட்கள் நீடிக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தினால் பாகிஸ்தானில் இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் அதிகரித்துள்ளன.
கடந்த 2022 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் சில பகுதிகள் வெள்ளத்தால் முற்றிலும் மூழ்கி, 1,700 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
அப்போது பெய்த கனமழை வெள்ளத்தால் மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர் மற்றும் பல மாதங்களாக சுத்தமான குடிநீரின்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல், வரும் நாட்களில் அதிக மழை பொழிவு இருக்கக்கூடும் என்றும், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் குறித்தும் பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது Heavy rains in Pakistan.
இதையும் படிங்க : ரூ.4 கோடி விவகாரம் – நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை?