இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, உட்பட வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
குமரி கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.
இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 30ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி ,கோவை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 30ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் தமிழகத்தில் மழை தொடரும் என்றும் இதன் காரணமாக அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதை ஒட்டிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.