சமூக நீதி அரசியலை படத்திற்கு படம் புகுத்தி எல்லோருக்கும் எல்லா உரிமையும் கிடைக்கவேண்டும் என்பதை மக்களுக்கு தனது எழுத்தின் மூலம் படமாக எடுத்துக்காட்டியவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ்.
அந்தவகையில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள படம் மாமன்னன். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நவரச நாயகி கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் வைகை புயல் வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படம் கடந்த மாதம் 29ம் தேதி பக்ரீத் பண்டிகை அன்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.
விளையாட்டு மற்றும் இளைஞர்நலத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதால் ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்க்கிடையே வெளியான இப்படம் முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது .
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ள மாமன்னன் திரைப்படம் தமிழகம் மட்டுமின்றில் உலகளவிலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது .
இந்நிலையில் பட்டி தொட்டி எங்கும் அமோக வரவேற்பை பெற்று வரும் மாமன்னன் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாமன்னன் திரைப்படம் இதுவரை ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.