தாதுமணல் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொள்ளையில் முக்கிய பங்காற்றும் தனியார் நிறுவனங்களிடம் 5,832 கோடி வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்மாவட்ட கடலோரப் பகுதிகளில் விதிகளை மீறி தாதுமணல் அள்ளிய புகார்களை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
வி.வி. மினரல்ஸ், ட்ரான்ஸ் வேர்ட்ல் கார்னெட், பீச் அண்டு மைனிங் உள்ளிட்ட 7 நிறுவனங்களுக்கு எதிரான புகாரில், சிறப்பு புலனாய்வுக் குழு அளித்த அறிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Also Read : விஜய்க்கு பாதுகாப்பு வழங்கியதில் எந்த அரசியலும் இல்லை – அண்ணாமலை விளக்கம்..!!
நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் செல்லும். இதில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் குறித்தும் விசாரிக்க வேண்டும். பதுக்கி வைக்கப்பட்டுள்ள மணலை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு தெரிவிக்கவும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.