மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அனைத்து மாநில பிரதான மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே நமது நாடு வலிமை அடையும் என்றும் பிறமொழியாளர்களும் இந்தியை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் உள்பட திமுக அமைச்சர்கள் எம்.பி-கள் என பலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் மத்திய உள்துறை அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி கூறியதாவது :
பிறமொழியாளர்களும் இந்தியை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமித்ஷா அவர்கள் பேசியிருப்பது இந்தித் திணிப்பு.
இந்தியைத் தவிர்த்த தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுவிட்டது. நாட்டின் ஒருமைப்பாட்டை அழிக்க நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு, மக்கள் ‘பன்மைத்துவ’த்தின் அர்த்தத்தை விரைவில் புரியவைப்பார்கள் என தனது ட்விட்டர் பதிவில் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்