Hindu Munnani Vs DMK | மத்திய அரசு கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என சித்தரிக்க திமுக முயற்சி செய்கிறது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளை மறுசீரமைக்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றை தந்திருக்கிறார்.
அந்த கடிதத்தில், “உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, 2500க்கும் மேற்பட்ட மத அடிப்படையிலான என்ஜிஓ-க்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 1600 கிறிஸ்தவ மற்றும் தேவாலய அடிப்படையிலான அமைப்புகளாகும். இந்த ரத்து, வேண்டுமென்றே சிறுபான்மை மத அடிப்படையில் இயங்கும் என்ஜிஓ-க்களை குறிவைத்ததை போல இருக்கிறது.
அதனால், இதுபோன்று உரிமங்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் 2010 மற்றும் அதன் விதிகளை சர்வதேச தரத்துடன் சீரமைத்து அவற்றை முழுமையாக மறு ஆய்வு செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: Vengaivayal Issue | DNA சோதனை வழக்கு தள்ளுபடி!-நீதிமன்றம் அதிரடி
இப்படி செய்வது, நமது தேசம் போற்றும் ஜனநாயக கொள்கைகளை நிலைநிறுத்தும். மட்டுமல்லாது நமது சமூகத்தின் நல்வாழ்வு மற்றும் தொண்டு நடவடிக்கைகளுக்கு அரசு
சாரா நிறுவனங்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளைப் பாதுகாக்கும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ,மத்திய அரசு கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என சித்தரிக்க திமுக முயற்சி செய்கிறது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக மக்களவை உறுப்பினர் வில்சன், கிறிஸ்தவர்களுக்கு வரும் வெளிநாட்டு நிதியுதவியை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
DMK எம்.பி. வில்சன், தமிழகத்தின் நலனுக்காக எந்த கடிதமும் எழுதவில்லை. மதத்தைப் பரப்ப வரும் வெளிநாட்டு உதவியை அனுமதிக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து பெறப்படும் நிதிக்கு உரிய கணக்கு காட்டாமல் இருக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது என்று தெரிந்தும், திமுக எம்.பி. வில்சன் இவ்வாறு கடிதம் எழுதுகிறார்.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1757278845667889495?s=20
சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிட அமெரிக்க அறக்கட்டளை தந்த ரூ.13 கோடியை தென்னிந்திய திருச்சபை சுருட்டியது.
இது தொடர்பான வழக்கு சென்னைஉயர் நீதிமன்றத்தில் நிலுவையில்இருக்கிறது.
அரசின் உபயோகத்துக்காக கோயில் நிலங்களை அபகரிக்கும் தமிழக அரசு, கிறிஸ்தவர்களிடம் இருந்து எத்தனை இடங்களை கையகப்படுத்தியுள்ளது?
வில்சனின் விசுவாசம் கிறிஸ்தவர்களிடம் மேலோங்க இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தேர்தல் நெருங்கும் நேரம் மத்திய அரசு கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என சித்தரிக்கும் முயற்சி(Hindu Munnani Vs DMK) .
இரண்டாவது திமுகவுக்கு தேர்தலில் செலவு செய்ய, வாக்குக்கு பணம் கொடுக்க, திமுக வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள,
நிதியை கிறிஸ்தவ நிறுவனங்கள் மூலம் சேவை நிதி என்ற பெயரில் தமிழகத்துக்குள் கொண்டு வருவதாகும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்