shani mantrasதுன்பங்களிலிருந்து விடுபட சொல்ல வேண்டிய சனிபகவான் மந்திரம்
சூரிய புத்திரனான சனி பகவானை கண்டு பலரும் அஞ்சுவதுண்டு.ஆனால் உண்மையில் நாம் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறே அவர் நமக்கு பலன்களை அளிக்கிறார்.சனி பகவானின் அருளை பெற்றால் வாழ்வில் வசதிகள் பெருகும்,நீண்டகாலம் நோய் நொடி இன்றி வாழலாம்,சமுதாயத்தில் அந்தஸ்து கூடும்,தலைமைத்துவதோடு வாழ வழி உண்டாகும்.
இதையும் படிங்க: மரண பயத்தை போக்கி நல்லதை நடத்தித் தரும் யோக நரசிம்மர் கோவில்
இப்படி பல நன்மைகளை தரும் சனிபகவானின் மந்திரம் இதோ.
நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம யமாக்ரஜம்
*சாயா மார் தாண்டஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்
கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன் என்று பொருள்
இந்த மந்திரத்தை சனிக்கிழமைகளில் 108 முறை ஜெபிப்பதன் பலனாக மேலே கூறிய பலன்கள் அனைத்தையும் பெறலாம்.