காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைநீர் தேங்கியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இன்று விடுமுறை அளித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள், வீடுகள், பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் வெள்ளமாக தேங்கியுள்ளது.
அந்த வகையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளின் வளாகங்களில் பெருமளவு மழைநீர் தேங்கியுள்ளது. அவ்வாறு தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனால் மாணவர்களின் நலன் கருதி அம்மாவட்ட நிர்வாகம் மழைநீர் தேங்கி நிற்கும் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் அரசு மேல்நிலைப் பள்ளி, அவளூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.
மேலும் தம்மனூர், பெரும்பாக்கம், வில்லிவலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கப்பள்ளிகள் என 7 அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.