வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி நெல்லை, புதுக்கோட்டை, , திருவாரூர் கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளார்.
இதேபோல புதுச்சேரியிலும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.