ஹாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜானிடெப். இவர் 2003-ல் வெளியான தி பைரேட் ஆப் தி கரீபியன் படத்தில் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றார். இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி உலகளவில் வரவேற்பை பெற்றன.
இதையடுத்து நடிகை ஆம்பர் ஹெட்டை காதலித்து வந்த ஜானிடெப் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
கடந்த 1997-ல் தி பிரேவ் படத்தை டைரக்டு செய்து இருந்தார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் ‘மோடி- திரி டேஸ் ஆன் தி விங் ஆப் மேட்னஸ்’ படம் வெளியானது.
இந்த நிலையில் ஜானிடெப்புக்கு இத்தாலியில் அடுத்த மாதம் நடைபெறும் ரோம் சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து தனது கலை திறமையை காட்டி தந்து நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து வரும் ஜானிடெப்புக்கு தற்போது பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.